Load Image
dinamalar telegram
Advertisement

கோவில் நடை அடைப்பு; தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம்

நாமக்கல்: ஐந்து நாட்களுக்கு கோவில்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி, மக்களை அச்சுறுத்தி வருகிறது. அவற்றை கருத்தில் கொண்டும், பரவலை கட்டுப்படுத்தவும், கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த, 7 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு, 10:00 முதல், அதிகாலை, 5:00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிறு முழு ஊரடங்கும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவில்களின் நடை அடைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல், வரும், 18 வரை, கோவில்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், பொங்கல் பண்டிகையான நேற்று, கோவிலுக்கு வந்த பக்தர்கள் சுவாமியை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். நாமக்கல் ஆஞ்சநேயர், நாமகிரி தாயார், பலப்பட்டறை மாரியம்மன் மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி, அசலதீபேஸ்வரர், மோகனூர் மற்றும் பொத்தனூர் கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள், ப.வேலூர் காசி விஸ்வநாதர் கோவில். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர், சேந்தமங்கலம் சோமேஸ்வரர் உள்பட, மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்கள் அடைக்கப்பட்டிருந்தன.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement