ரூ.24.24 லட்சத்துக்கு காய்கறி விற்பனை
நாமக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்தையில், இரண்டு நாட்களில், 24.24 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாயின. நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை செயல்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உழவர் சந்தைக்கு, காய்கறிகளின் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம், 170 விவசாயிகள், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை விற்பனைக்கு கொண்டு வந்தன. கத்தரிக்காய், பீர்க்கை, வெண்டை, புடலை, சுரைக்காய், பூசணி. அவரை, முள்ளங்கி, உருளை கிழங்கு உள்ளிட்டவை, 24 ஆயிரத்து, 515 கிலோ, 11 ஆயிரத்து, 450 கிலோ பழங்கள் என, மொத்தம், 35 ஆயிரத்து, 965 கிலோ விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதன் மூலம், ஒரே நாளில், 14 லட்சத்து, 72 ஆயிரத்து, 490 ரூபாய் அளவுக்கு விற்பனையானது. நேற்று, 152 விவசாயிகள், 18 ஆயிரத்து, 600 கிலோ காய்கறிகள், 6,980 கிலோ பழங்கள் என, மொத்தம், 25 ஆயிரத்து, 580 கிலோ விற்பனைக்கு கொண்டு வந்தனர். அவை, ஒன்பது லட்சத்து, 51 ஆயிரத்து, 570 ரூபாய்க்கு விற்பனையானது. இரண்டு நாட்களில், 8,650 வாடிக்கையாளர்கள், தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறி, பழங்கள், கீரை வகைகளை வாங்கி சென்றனர். அதன் மூலம், 24 லட்சத்து, 24 ஆயிரத்து, 60 ரூபாய் அளவுக்கு விற்பனையானது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!