dinamalar telegram
Advertisement

தி.மு.க. பொங்கல் விழா

Share
பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், தி.மு.க., சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளிபாளையம் நகர, தி.மு.க., சார்பில் ஆவராங்காடு பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில், நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பொங்கல் விழா நடந்தது. புது பானையில் பொங்கல் வைத்து, சிறப்பாக கொண்டாடினர். நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் பொங்கல், கரும்பு வழங்கப்பட்டன. மாவட்ட பொருளாளர் குமார், நகர அவைத்தலைவர் குலோப்ஜான், இளைஞரணி அமைப்பாளர் வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement