dinamalar telegram
Advertisement

கால்நடைகளை கட்டுக்குள் கொண்டு வர உதவும் கயிறு வகைகள்

Share
குமாரபாளையம்: கால்நடைகளை கட்டுக்குள் கொண்டு வர, கயிறுகள் மிகவும் உதவுகின்றன என்றால் அது மிகையல்ல. ஆடு, மாடு, எருமை, குதிரை, நாய் உள்ளிட்டவைகளை கட்டுக்குள் கொண்டு வர, கயிறு வகைகள் மிகவும் உதவி வருகின்றன. இதற்கான கயிறுகளை, 40 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்து வரும் மாதேஸ்வரன் கூறியதாவது: விவசாயிகள், கால்நடைகளை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர பலவிதமான கயிறுகளை பயன்படுத்தி வருகின்றனர். அவை மூக்கணாங்கயிறு, முகரை கயிறு, கழுத்து கயிறு, கொம்பு கயிறு, தலை கயிறு, ஆட்டு கயிறு, முடி கயிறு, சூடி கயிறு, சுருணை கயிறு உள்ளிட்ட வகைகள் உள்ளன. இவைகள் யாவும் நூல் கயிறுகளாகும். இந்த நூல் கயிறுகள் சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள திருமானூர் பகுதியில் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. இதில் மேலும் சில வகைகள், நைலான் இழைகளினாலும் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் நாரினால் தயாரிக்கப்படும் கயிறு வகைகள் சேலம் நகரில் கிடைக்கிறது. முன்பெல்லாம் விவசாயிகள் வீட்டுக்கு வீடு, 10க்கும் மேற்பட்ட மாடுகள், எருமைகள், ஆடுகள் ஆகியவைகளை வளர்த்து வந்தனர். இப்போது அவைகளை மேய்க்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டதால், மிக குறைந்த அளவிலான கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதனால் வியாபாரம் நலிவடைந்துள்ளது. இதில் வரும் வருவாயை வைத்து, குழந்தைகளை படிக்க வைப்பதோ, ஒரு தொழில் அமைத்து கொடுக்கவோ இயலாத நிலைதான் நீடித்து வருகிறது. நாய்களுக்கு தேவையான பெல்ட், இரும்பு சங்கிலிகளும் விற்று வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement