dinamalar telegram
Advertisement

அரசு கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா

Share
ராசிபுரம்: ராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் தினம் கொண்டாடபட்டது. இணையவழி கருத்தரங்கம் நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், 7:30 மணி வரை நடந்தது. சேலம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் மகேஸ்வரி, விவேகானந்தரின் போதனைகளும் சாதனைகளும் என்ற தலைப்பில் பேசினார். 100 மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் முனைவர் மணிமேகலை தலைமை வகித்தார். நிகழ்ச்சியை பிரபாகரன் தொகுத்து வழங்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement