dinamalar telegram
Advertisement

கூடலூர் ஸ்ரீமதுரை ஊராட்சியில் பொங்கல் விழா

Share
Tamil News
கூடலுார்: கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சி அலுவலகம் மற்றும் கம்மாத்தி பகுதிகளில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி நடக்கும் இடத்தில், ஊராட்சி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ஊராட்சி தலைவர் சுனில் தலைமை வகித்தார். ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர். தொடர்ந்து, கம்மாத்தி பகுதியில், நுாறு நாட்கள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள், பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு பூஜை செய்து, பொங்கல் கொண்டாடினர். விழாவில், கூடலுர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கங்காதரன், ஊராட்சி துணை தலைவர் ரெஜி மேத்யூ, ஊராட்சி செயலாளர் சோனி பங்கேற்றனர்,
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement