dinamalar telegram
Advertisement

வீட்டுக்குள் புகுந்த பாம்பு: மீட்டு வனத்தில் விடுவிப்பு

Share
Tamil News
குன்னுார்: குன்னுார் எம்.எல்.ஏ., அலுவலகம் பகுதியிலிருந்து வந்து, வீட்டிற்குள் புகுந்த ஆறரை அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

குன்னுார் ஐயப்பன் கோவில் அருகே எம்.எல்.ஏ., அலுவலகம் பகுதியிலிருந்து பாம்பு ஒன்று சாலையை கடந்தது. அப்போது அவ்வழியாக வந்த மூதாட்டி ஒருவர், பாம்பை கண்டு அலறி அவ்வழியாக வந்த காரின் மீது விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார்.

இந்நிலையில், அந்த பாம்பு அருகிலுள்ள வீட்டிற்குள் இருந்தது.தகவலின்பேரில், குன்னுார் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வீட்டிற்குள் இருந்த பாம்பை பிடித்தனர். ஆறரை அடி நீளமுள்ள இந்த கருஞ்சாரை பாம்பை வனப்பகுதிக்குள் விட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement