dinamalar telegram
Advertisement

இனி பாஜ.,விலிருந்து வருபவர்களுக்கு இடமில்லை: அகிலேஷ் யாதவ்

Share
டில்லி: இனி பாஜ.,விலிருந்து வருபவர்களுக்கு இடமில்லை என அகிலேஷ் யாதவ் தெரித்துள்ளார்.


உத்தரபிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து யோகி ஆதித்யநாத் அரசு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள உத்தரபிரதேச தேர்தலில் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் அறிவித்தது. யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியது.

பாஜ.,வை சேர்ந்த ஓபிசி தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களான சுவாமி பிரசாத் மௌரியா மற்றும் தரம் சிங் சைனி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சமாஜ்வாடி கட்சி கட்சியில் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

இதேபோல பாஜ., சட்டமன்ற உறுப்பினர்களான ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி, முகேஷ் வருமா, வினை சங்கையா பகவதி சாகர் உள்ளிட்டவர்களும் பாஜகவிலிருந்து பிரிந்து சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர்.
இதனையடுத்து தற்போது இதுகுறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இனி பாஜ.,விலிருந்து யாரும் சமாஜ்வாடி கட்சியில் சேர அனுமதி இல்லை என்றும் ஏற்கனவே சமாஜ்வாடி கட்சியில் இடங்கள் நிரம்பி விட்டன என்றும் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • nizamudin - trichy,இந்தியா

    வேண்டாம் இவர்கள் உளவாளிகளாக இருக்கலாம் ?

  • Hari - chennai,இந்தியா

    பிரசாந்து கிசோர் என்ன சொல்றாருன்னு ஒருமுறை அவரிடம் கேட்டுக்குங்க.

  • duruvasar - indraprastham,இந்தியா

    நிரம்பினால் என்ன. 153 அடிவரை தேக்கலமே. மேலும் மற்ற கட்சிகளிலிருந்து ஆட்களை கொண்டுவர பூர்வாஞ்சல் மண்டல பொருப்பாளாராக சுவாமி மயூராவை நியமித்து விடுங்கள்.சி + + + நன்கு தெரிந்தவர்.

  • அப்புசாமி -

    ஹவுஸ்ஃபுல்...

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    டிக்கட் கொடுக்கும்போது கட்சி மாறி வந்தவர்களுக்கு கொடுத்தால் இவுங்க கட்சி ஆளுங்க உள்குத்து குத்துங்க ..போன தடவை மாயாவதியோட கூட்டு வைத்தே இவரால் சாதிக்க முடியவில்லை ..

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்