ADVERTISEMENT
புதுடில்லி: தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் ஜன.,22 வரை தேர்தல் பேரணி, பாத யாத்திரைகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கோவிட் பரவல் காரணமாக, இங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தேர்தல் யாத்திரைகள், பேரணிகளுக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் ஜன.,22 வரை எந்த தேர்தல் பேரணிகள், பாதயாத்திரைகளும் நடத்தக்கூடாது. உள்ளரங்குகளில் 300 பேர் அல்லது அந்த அரங்கில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் பேருடன் கூட்டங்களை நடத்தி கொள்ளலாம். கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்றி நடக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கோவிட் பரவல் காரணமாக, இங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தேர்தல் யாத்திரைகள், பேரணிகளுக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!