dinamalar telegram
Advertisement

போலீஸ் ஸ்டேஷனில் ஊராட்சி தலைவரின் கணவருக்கு அடி, உதை

Share
திருச்சுழி: பரளச்சி அருகே செங்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் தங்கப்பொண்ணு, 40, இவருடைய கணவர் சவரிமுத்து. இவர் நேற்று பரளச்சி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு பிரச்சனைக்காக சென்றுள்ளார். அங்கே அதே ஊரைச் சேர்ந்த முனியசாமி தரப்பினர் மற்றொரு பிரச்சனைக்காக வந்துள்ளனர். ஏற்கனவே சவரிமுத்து மீதுள்ள அதிருப்தியில், ஸ்டேஷனிலிருந்து அவரிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர், அவரை அடித்து உதைத்துள்ளனர். பராச்சி போலீசார் முனியாண்டி தரப்பைச் சேர்ந்த பஞ்சவர்ணம், மாரிமுத்து, ஞானமுத்து, கார்த்திக், முனியசாமி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement