dinamalar telegram
Advertisement

வருவாயை மேலும் அதிகரிக்க பிரைத்வைட் நிறுவனம் முயற்சி

Share
Tamil News
புது டில்லி: ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனமான, 'பிரைத்வைட்', அதன் வருவாயை நான்கு மடங்கு அதிகரிக்கவும், விரைவில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரவும் திட்டமிட்டுள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த பிரைத்வைட் நிறுவனம், அதன் வருவாயை, நான்கு மடங்கு அதிகரித்து, 2500 கோடி ரூபாயை எட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், 2025-26 நிதியாண்டில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் முயற்சியிலும் இறங்கி உள்ளது.இந்நிறுவனம், கடந்த மூன்று ஆண்டுகளில் லாபப் பாதைக்கு திரும்பி, கடந்த நிதியாண்டில் 609 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான யதிஷ் குமார் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில், டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டு வரையிலான காலத்தில், 488 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளோம். மார்ச் மாதத்துக்குள், 700 கோடி ரூபாய் வருவாயை எட்டிவிடுவோம் என கருதுகிறோம். மேலும், 2025-26 நிதியாண்டில், நான்கு மடங்கு அளவுக்கு வருவாயை அதிகரித்து, 2500 கோடி ரூபாயை ஈட்டவும் திட்டமிட்டுள்ளோம். இந்த இலக்கை எட்டியதும், புதிய பங்கு வெளியீட்டுக்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். தற்போது கடன் எதுவும் இல்லாத நிறுவனமாக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement