dinamalar telegram
Advertisement

பஞ்சாப் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்.,

Share
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் சட்டசபைக்கு பிப்.,14ல் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற சிரோன்மணி அகாலிதளமும் மற்றும் அமரீந்தர் சிங் பா.ஜ., கூட்டணியும் முனைப்பு காட்டி வருகின்றன. மற்றொரு முனையில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக தீவிரம் காட்டி வருகிறது. முதல்வர் வேட்பாளர் குறித்து மக்களின் கருத்தை கேட்டுள்ளது. இதில் பல லட்சம் பேரின் கருத்துகள் கிடைத்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாக 86 வேட்பாளர்களை கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி- சம்காவுர் சாஹிப் தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் சித்து- அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியிலும் , பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் மோகா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்