dinamalar telegram
Advertisement

லாரி மீது பைக் மோதி இருவர் பரிதாப பலி

Share
கிருஷ்ணகிரி: லாரி மீது டூ - வீலர் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வீரமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ் 21; ராஜேஷ் 20. இருவரும் நண்பர்கள்.இருவரும் நேற்று மதியம் போச்சம்பள்ளியில் இருந்து தங்கள் வீட்டிற்கு பஜாஜ் பிளாட்டினா பைக்கில் போச்சம்பள்ளி - காரிமங்கலம் சாலையில் அனுமந்த நகர் பகுதியில் உள்ள வளைவில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது எதிரே வந்த லாரி மீது பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement