dinamalar telegram
Advertisement

பங்கு வெளியீடு குறித்து அதானி வில்மார் முடிவு

Share
Tamil News
புது டில்லி: சமையல் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, 'அதானி வில்மார்' நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 4500 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுருந்த நிலையில், தற்போது அதை 3600 ரூபாயாக குறைத்துக் கொண்டுள்ளது.

அதானி வில்மார் நிறுவனம், 'பார்ச்சூன்' எனும் பிராண்டு பெயரில், சமையல் எண்ணெய்யை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், அகமதாபாத்தை சேர்ந்த அதானி குழுமமும், சிங்கப்பூரை சேர்ந்த வில்மார் நிறுவனமும், சம பங்குகளுடன் இணைந்து நடத்தி வருகிறது.நுகர்பொருள் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அதானி வில்மார் வருவாய், 37 ஆயிரத்து, 195 கோடி ரூபாயாக உள்ளது.

இந்நிலையில், இந்நிறுவனம், நடப்பு மாதத்தில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.துவக்கத்தில் 4500 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், அதை தற்போது 3600 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகள் விற்கப்படாது என்றும்; முழுக்க புதிய பங்குகள் மட்டுமே விற்பனைக்கு விடுக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement