dinamalar telegram
Advertisement

ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

Share
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே ஆற்று சுழலில் சிக்கி சிறுவன் பலியானான்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கங்காநாதபுரத்தைச் சேர்ந்தவர் விஜயன். இரண்டு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகன் ராகுல் 13; எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற ராகுல் சுழலில் மூழ்கி மாயமானார்.

சுவாமிமலை போலீசார் கும்பகோணம் மற்றும் பாபநாசம் தீயணைப்பு நிலைய வீரர்கள் ராகுலை தேடினர். இரவானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டு நேற்று காலை மீண்டும் தேடினர். சுவாமிமலை அருகே நாணல் புதரில் சிக்கியிருந்த ராகுலின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement