dinamalar telegram
Advertisement

மானிய விலையில் கால்நடை தீவனம்: கப்பலூர் ஆலையை இயக்க வலியுறுத்தல்

Share
Tamil News
ஈரோடு: ஆவின் கால்நடை தீவனத்தை மானிய விலையில் வழங்குவதுடன் இயங்காத இரு ஆலைகளையும் இயக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் - ஆவின் வாயிலாக சென்னிமலை சாலையில் 1982ல் கால்நடை தீவன உற்பத்தியை துவங்கினர். அதே வளாகத்தில் தினமும் 150 டன் தீவன உற்பத்தி திறன் உள்ள புதிய தானியங்கி ஆலையை 2017ல் செயல்படுத்தினர்.அதே ஆலையில் கூடுதலாக 150 டன் உற்பத்திக்கான இயந்திரங்கள் அமைக்கப்பட்டு மாதிரி ஓட்டம் நடக்கிறது. இந்த ஆலை மூலம் 1.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர். விரைவில் காணொலி வாயிலாக முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முனுசாமி கூறியதாவது: ஆரம்பத்தில் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் கால்நடை தீவனத்தை பால் சொசைட்டி மூலம் கறவையாளர்களுக்கு மட்டும் வழங்கினர். 1 கிலோவுக்கு இரண்டு ரூபாய் மானியம் வழங்கினர். உற்பத்தி அதிகரித்ததும் நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் தீவனத்தை அனுப்பினர்.

மாநில அளவில் அனைத்து மாவட்டங்களுக்கும் தீவனம் கிடைக்கும் வகையில் தென் மாவட்டத்துக்கு மதுரை கப்பலுாரிலும் வட மாவட்டங்களுக்கு ஆம்பூரிலும் இதேபோல் ஆலையை நிறுவி திறம்பட செயல்படுத்தாமல் மூடிவிட்டனர். இவற்றை இயக்க நடவடிக்கை தேவை.தற்போது 50 கிலோ கலப்பு தீவனம் 1040 ரூபாய்க்கு விற்கின்றனர். அதே விலையில் அனைத்து பகுதியிலும் இரண்டு ரூபாய் மானியத்துடன் வழங்க வேண்டும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement