dinamalar telegram
Advertisement

ரூ.10 லட்சம் குட்கா பறிமுதல்; ஒருவர் கைது

Share
Tamil News
ஆத்துார்: தெடாவூரில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த தெடாவூரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரிப்பகுதியில் மினி சரக்கு வேனை நிறுத்தி கும்பல் தப்பி ஓடியது.வேனை சோதனை செய்தபோது 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 20 மூட்டைகளில் 1000 கிலோ 'குட்கா' பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.வேன் உரிமையாளர் அதே பகுதியைச் சேர்ந்த திருமுருகன் 50 என்பவரை கைது செய்து தலைமறைவான ஆறுமுகம் உட்பட மூன்று பேரை தேடுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement