dinamalar telegram
Advertisement

வாடிக்கையாளரை தாக்கிய நிதி நிறுவன ஊழியர்

Share
சேலம்: சேலம், பள்ளப்பட்டி, சின்னேரி வயக்காட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன், 24. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, டியோ மொபட் வாங்கினார். இதற்கான தவணை செலுத்தி வந்த நிலையில், 2021 ஆகஸ்ட் தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து அவரிடம் விசாரிக்க, நிதி நிறுவன ஊழியர்களான, பொன்னம்மாபேட்டை பிரசாந்த், 29, நாகராஜன், 27, கடந்த செப்., 23 இரவு, 7:00 மணிக்கு கார்த்திகேயன் வீட்டுக்கு வந்தனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, இரு ஊழியர்களும் கார்த்திகேயனை தாக்கினர். அவர், செப்., 24ல் அளித்த புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்தனர். நேற்று முன்தினம், பிரசாந்த், நாகராஜன் மீது வழக்குப்பதிந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement