நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம்
நாகப்பட்டினம்: நாகூர் தர்காவில் யாத்ரீகர்கள் பங்கேற்பு இல்லாமல் சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நாகை அடுத்த நாகூரில் பிரசித்திப் பெற்ற ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா அமைந்துள்ளது. இத்தர்காவில் 465வது ஆண்டு கந்தூரி விழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கந்தூரி விழாவில் முக்கிய நிகழ்வாக தர்கா சன்னதியில் சந்தனம் பூசும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சந்தனக் கூடு ஊர்வலம், சந்தனம் பூசும் வைபவத்தில் யாத்ரீகர்கள் பங்கேற்பதற்கு நாகை மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, எளிமையான முறையில் சந்தனக் கூடு நாகையில் இருந்து புறப்பட்டு, நாகூர் வந்தடைந்தது. நேற்று அதிகாலை 4:20 மணிக்கு, தர்கா சன்னதியில் யாத்ரீகர்கள் இன்றி சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நிகழ்ச்சியில் தர்கா ஆதினகர்தாக்கள் 40 பேர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!