dinamalar telegram
Advertisement

போலீஸ் துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா

Share
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீஸ் கோட்டத்துக்கு உட்பட்ட, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, மத்தூர் ஆகிய ஐந்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட காவலர்கள், ஊத்தங்கரை காவலர் குடியிருப்பு வளாகத்தில் ஒன்று கூடி, சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். முன்னதாக புது பானையில் பொங்கலிட்டு, படையல் இட்டு, சூரிய வழிபாடு செய்தனர். பின்னர் காவலர் குடும்பங்களுக்கிடையே, பல்வேறு போட்டிகள் நடந்தன. கோலப்போட்டி, இசை நாற்காலி போட்டி, சட்டி உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஊத்தங்கரை டி.எஸ்.பி., அலெக்சாண்டர், இன்ஸ்பெக்டர்கள் ஊத்தங்கரை லட்சுமி, சிங்காரப்பேட்டை செல்வராஜ், கல்லாவி பத்மாவதி, மத்தூர் முருகன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement