dinamalar telegram
Advertisement

நலவாரிய உறுப்பினர்கள் விபரங்களை பதிவேற்றலாம்

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடாஜலபதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு கட்டுமானம் உள்ளிட்ட, 18 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில், பதிவு பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைமுறை இணையதளம் மூலமாக தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்று, புதுப்பித்து உள்ள தொழிலாளர்கள் அனைவரும் தங்களுடைய நலவாரிய அட்டையுடன், ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றை ttnuwwb.tn.gov.in என்ற இணைதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04343 231321 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement