dinamalar telegram
Advertisement

ரேஷன் அரிசி கடத்தல், கொலை: மூவருக்கு குண்டாஸ்

Share
கிருஷ்ணகிரி: ரேஷன் அரிசி கடத்தல், கொலை மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வாகனங்களில் கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய வேலூர் மாவட்டம், குடியாத்தம் மேலாலத்தூரை சேர்ந்த சுரேஷ், 39, ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, காமராஜபுரத்தை சேர்ந்த வீரமணி, 29 ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் தர்மபுரி, சேலம் சிறைகளில் உள்ளனர். இதேபோல தேன்கனிக்கோட்டை அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் நண்பரை அடித்து கொன்ற வழக்கில், தேன்கனிக்கோட்டை மாரச்சந்திரத்தை சேர்ந்த மகேஷ் (எ) மகேஷ்குமார், 35, என்பவரை தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர்; இவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூவர் மீதும் கடத்தல், கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement