dinamalar telegram
Advertisement

குட்கா கடத்திய இருவர் கைது; கார் பறிமுதல்

Share
கிருஷ்ணகிரி: ஓசூர், ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் எஸ்.எஸ்.ஐ., மணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டாடா இண்டிகோ காரை நிறுத்தி சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தியது தெரிந்தது. விசாரணையில் காரில் வந்தவர்கள் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த அபுதாகிர், 32, தேனி மாவட்டம், கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த சியாயுல்லா, 33 என்பது தெரிந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement