dinamalar telegram
Advertisement

லாட்ஜ் ஊழியரை தாக்கியவர் கைது

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வண்ணத்திபட்டி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன், 39. தேன்கனிக்கோட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 13ல், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த புட்டப்பா, 33 என்பவர் அந்த லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். அறையை சுத்தம் செய்வதற்காக சென்று, கதவை தட்டிய முனியப்பனை தகாத வார்த்தையால் பேசிய புட்டப்பா, காலால் எட்டி உதைத்துள்ளார். இதுகுறித்து முனியப்பன் அளித்த புகார்படி, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து, புட்டப்பாவை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement