dinamalar telegram
Advertisement

நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்

Share
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த நொச்சிக்குட்டை கோவில் வனம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார், 25. இவர் தனது மாருதி காரில், காரிமங்கலத்திற்கு நேற்று காலை சென்று விட்டு, மாலை உறவினர்கள் மூவருடன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். புட்டிரெட்டிபட்டி சாலையில் வெ.புதூரை தாண்டி செல்லும் போது, ஆற்றுபாலம் அருகே காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்தது. இதனையடுத்து, காரை அங்கேயே நிறுத்தி விட்டு அனைவரும் கீழே இறங்கினர். தொடர்ந்து காரில் இருந்து அதிகளவில் புகை வந்தது. பின்னர் காரின் முன்பகுதியில் பேட்டரி உரசி தகதகவென தீப்பற்றி எரிந்தது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன. முழுமையாக தீ அணைக்கப்பட்டது. காரில் சென்ற நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement