dinamalar telegram
Advertisement

சாலை விபத்தில் இருவர் பலி; பொதுமக்கள் சாலை மறியல்

Share
நல்லம்பள்ளி: பாளையம்புதூரில், டூவீலர் மீது பிக்கப் வாகனம் மோதிய விபத்தில், இருவர் இறந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதூரை சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி, 29, திருஞானம், 26, பூபேஸ், 30. இவர்கள் யமாஹா கிரஸ் பைக்கில் சனிசந்தை பகுதியிலிருந்து, பாளையம்புதூருக்கு நேற்று மாலை, 6:50 மணிக்கு சென்று கொண்டிருந்தனர். பாளையம்புதூர், நான்குரோடு பகுதியை கடக்க முயன்றபோது, சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பிக்கப் வாகனம், டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில், பெருமாள்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், திருஞானம் இறந்தார். பூபேஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்த பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். தொப்பூர் போலீசார் சமாதானப்படுத்திய பின், மறியலை கைவிட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement