dinamalar telegram
Advertisement

பருவதனஅள்ளியில் மரக்கன்று நடும் விழா

Share
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த, பருவதனஅள்ளியில் இளம் புயல் இளைஞர் நற்பணி மன்ற தொடக்க விழா நடந்தது. ஊர் கவுண்டர் அன்பழகன் தலைமை வகித்தார். மன்ற தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். மன்ற செயலாளர் தமிழ்வாணன், துணைத் தலைவர் வெங்கடேசன், துணை செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். பென்னாகரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், பெயர் பலகையை திறந்து வைத்தார். தொடர்ந்து பசுமையை காக்கும் வகையில், 60 மரக்கன்றுகள் நடப்பட்டன. பஞ்.,தலைவர் முனிராஜ், துணைத் தலைவர் சுசீலா, சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பழனி, ஆசிரியர் பெருமாள், எஸ்.ஐ., துரை, சமூக ஆர்வலர்கள் தேவகி, மணிவண்ணன் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement