dinamalar telegram
Advertisement

தைப்பூசத்தையொட்டி முருகன் கோவிலில் கொடியேற்று விழா

Share
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி, நேற்று கொடியேற்றம் நடந்தது.
தர்மபுரி, குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழா, 10 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி நேற்று கொடியேற்றம் நடந்தது. இதில், சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபி?ஷக ஆராதனை, வழிபாடு நடந்தது. பின், ஆகம விதிப்படி கொடியேற்றப்பட்டது. ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக, கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு கோவில் வளாகத்தில், சுவாமி ஊர்வலம் நடந்தது. வரும், 18ல் தைப்பூச தினத்தன்று கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெண்கள் மட்டுமே வடம் பிடித்து தேர் இழுக்கும் தேர் திருவிழா, கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவுப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகம விதிப்படி கோவில் வளாகத்தில் சுவாமி உற்சவம் நடக்கும். இதில் பங்கேற்கவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தேரோட்டத்தின்போது நடக்கும் அன்னதானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement