dinamalar telegram
Advertisement

அரசு உத்தரவின்படி கோவில்கள் மூடல்

Share
தர்மபுரி: கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு உத்தரவின்படி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. நாடு முழுவதும், ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு, 10:00 மணி முதல் காலை, 5:00 மணி வரை ஊரடங்கு என அறிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகை வந்த நிலையில், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கோவில் வழிபாட்டு தலங்களை மூட அரசு உத்தரவிட்டது. இதனால், பொதுமக்கள் கோவில்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். ஆனாலும், சில கிராமத்து சிறிய கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து சில பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, பொங்கல் வழிபாடு செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement