dinamalar telegram
Advertisement

உருக்காலையில் 60 மெகாவாட் மின் உற்பத்தி எப்போது?

Share
சேலம் உருக்காலையில், 60 மெகாவாட் மின்உற்பத்தி எப்போது நடக்கும் என, 20 ஆண்டாக தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய உருக்கு(செயில்) ஆணைய கட்டுப்பாட்டில், சேலம் உருக்காலை உள்ளது. அத்துடன் சேர்ந்து, நாடு முழுதும், 9 உருக்காலைகள் உள்ளன. அதிக லாபம் ஈட்டும், ஐந்து பொதுத்துறை நிறுவனங்களில், 'செயில்' நிறுவனமும் ஒன்று. பிலாய்(சட்டீஸ்கர்), பொக்காரோ(ஜார்க்கன்ட்), ரூர்கேலா(ஒடிசா), இஸ்கோ, துர்காபூர்(மேற்கு வங்கம்) என, ஐந்து பெரிய ஆலைகள், அலாய் (மேற்கு வங்கம்), வி.ஐ.எஸ்.எல்.,(கர்நாடகா), எம்.இ.எல்.,(மகாராஷ்டிரா) சேலம் உருக்காலை(தமிழ்நாடு) என, நான்கு சிறு ஆலைகள் அடங்கும். இதில், சேலம் தவிர்த்து மற்ற ஆலைகளில், மின் நிலையம் நிறுவி, உற்பத்தியாகும் மின்சாரம், உருக்காலை தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன்மூலம் மின் செலவினத்தில், 50 சதவீத தொகை மிச்சமாகி, உருக்காலை வளர்ச்சிக்கு சொந்த மின் உற்பத்தி பெரும் பங்களிப்பாக உள்ளது. அதனால், சேலம் உருக்காலையிலும் சொந்தமாக, 60 மெகாவாட் மின் உற்பத்திக்கு வித்திட, 20 ஆண்டாக தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, சேலம் உருக்காலை ஐ.என்.டி.யு.சி., செயல் தலைவர் தேவராஜூ கூறியதாவது: சேலம் உருக்காலை உற்பத்திக்கு, தமிழக மின்வாரியம், பவர் டிரேடிங் கார்ப்பரேஷன், சட்டீஸ்கரில் தனியாரிடமிருந்தும் மின்கொள்முதல் நடக்கிறது. அதற்காக மாதம், 13 முதல், 15 கோடி ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. நமக்கு போட்டியே, தனியார் ஆலை ஜிண்டால்தான். அது சொந்தமாக மின் உற்பத்தி செய்வதால், ஒரு யுனிட்டுக்கு குறைந்தது, 3 முதல், 3 ரூபாய், 50 காசு வரை செலவு செய்கிறது. நமக்கு, 6 ரூபாய், 50 காசு முதல், 7 ரூபாய் வரை செலவாகிறது. அதனால், மின் செலவினத்தை குறைக்க, சேலம் உருக்காலையில், 60 மெகாவாட் உற்பத்திக்கு வித்திட, 20 ஆண்டாக வலியுறுத்துகிறோம். அதன் வளர்ச்சி கருதி நான்கு ஆண்டாக அழுத்தம் தருகிறோம். கடந்த டிச., 27ல், ஆலையில் ஆய்வு மேற்கொண்ட செயில் நிறுவன தொழில்நுட்ப இயக்குனர் நந்துராய், 'மின் ஆலை நிறுவ பரிசீலனை நடக்கிறது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்' என, தெரிவித்தார். அதன்படி, சூரியமின்சக்தி மூலம், 60 மெகாவாட் உற்பத்தி பயன்பாட்டுக்கு வந்தால், ஆண்டுக்கு குறைந்தது, 75 கோடி ரூபாய் வரை செலவு மிச்சமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement