dinamalar telegram
Advertisement

எல்லையில் சூழ்நிலை மேம்பட்டுள்ளது: ராணுவ தளபதி

Share
புதுடில்லி: கடந்த ஆண்டை காட்டிலும், எல்லையில் சூழ்நிலை மேம்பட்டுள்ளது என ராணுவ தளபதி எம் எம் நரவானே தெரிவித்துள்ளார்.

அஞ்சலி



தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு டில்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்கு சென்ற ராணுவ தளபதி நரவானே, கடற்படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி சவுத்ரி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், டில்லி கன்டோன்மென்ட்டில் நடந்த ராணுவ அணிவகுப்பு மரியாதையை ராணுவ தளபதி ஏற்று கொண்டார். தொடர்ந்து வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

பயங்கரவாதிகள் தயார்



தொடர்ந்து அவர் பேசியதாவது: சீனா ஏற்படுத்திய பதற்றம் காரணமாக கடந்த ஆண்டு ராணுவத்திற்கு மிகப்பெரிய சவாலான ஆண்டாக அமைந்தது. நிலைமையை கட்டுக்குள் வைக்க சமீபத்தில் 14வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. சில இடங்களில் படைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட எல்லையில் சூழ்நிலை மேம்பட்டுள்ளது.

ஆனால், எல்லை அருகே பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. 300 முதல் 400 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருக்கின்றனர். பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 144 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, அவர்களால் மிகப்பெரிய பதவிகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற முடியும். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் சேர்க்கப்பட உள்ளனர். இவ்வாறு ராணுவ தளபதி நரவானே பேசினார்.

பெரிய தேசியகொடி காட்சிபடுத்தப்பட்டது



தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜெய்சல்மரில், காசி அமைப்பு தயாரித்த 225 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்ட தேசியக்கொடி காட்சிபடுத்தப்பட்டது.

வாழ்த்து



தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

வீடியோ வெளியீடு



இந்நிலையில், ராணுவ வீரர்களின் வீரத்தையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் வீடியோ ஒன்றை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், முப்படைகளின் வீரம், சாகசம் உள்ளிட்டவை விளக்கப்பட்டுள்ளன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • SUBBU - MADURAI,இந்தியா

    ராணுவத்தில் பெண்களுக்கு சம வாய்ப்பு என்பது தேவையில்லாதது. இவர்களை பாதுகாக்கவே ஒரு தனிப்படை அமைக்க வேண்டும். எல்லை பாதுகாப்பில் இவர்களை ஈடுபடுத்தினால் இவர்களையிட்டு நமக்கு தலைவலிதான்.

  • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

    அடிக்கடி ஏவுகனைகளை சோதனை செய்வதாலும் எல்லையில் சாலைகள் மேம்பாட்டு, எந்த சவாலுக்கும் தயாராக இருக்கிற நமது இராணுவ வீரர்களின் வலிமையான மனோதிடமே எல்லையில் அமைதிக்கு காரணம். அனைவருக்கும் இராணுவ தின நல்வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    சார் ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட சீனாவின் அச்சுறுத்தல் தொடருதுன்னு சொன்னீங்களே யாரு உங்க வாயை அடைச்சது ?

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்