dinamalar telegram
Advertisement

குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடு விற்பனை

Share
Tamil News
கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு கிராமப் புறங்களில் சுவாமிக்கு ஆடு கோழிகள் பலியிட்டு வணங்குவது வழக்கம். இதன்படி பொங்கல் தினமான நேற்று வழக்கமாக நடைபெறும் வெள்ளிக் கிழமை குந்தராப்பள்ளி வாரச்சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. ஆடுகளை விற்கவும் வாங்கி செல்லவும் விவசாயிகளும் வியாபாரிகளும் பொதுமக்களும் அதிகளவில் திரண்டனர்.

வேலுார் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி சேலம் தர்மபுரி ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.குந்தாரப்பள்ளி சாலையில் ஆடுகளை ஏராளமான சரக்கு வாகனங்களில் கொண்டு வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆடுகள் 8000 முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.நேற்று ஒரே நாளில் 3 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான போதும் வெள்ளாடுகள் விற்பனையான அளவிற்கு செம்மறி ஆடுகள் விற்பனை ஆகவில்லை. இதேபோல் சந்தையில் நாட்டுக் கோழிகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement