dinamalar telegram
Advertisement

இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை; முதல்வர் அறிவிப்பு

Share
சென்னை: தமிழக அரசின் சார்பில், முல்லைப் பெரியார் அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் நிறுவப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த, ‛கர்னல் ஜான் பென்னிகுயிக்' புதிய சிலையை, அவரது பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவரது பிறந்தநாளான இன்று (ஜன.,15) அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது சிலையை நிறுவ, அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலை பெற்றுள்ளார்கள். தென் மாவட்ட மக்களின் நீண்டகால தண்ணீர் பிரச்னையை கருத்தில் கொண்டு பெரும் போராட்டத்தில் பல்வேறு இன்னல்களை கடந்து கட்டப்பட்ட முல்லைப் பெரியாற்றின் மீதான தமிழகத்தின் உரிமையை எந்நாளும் விட்டுக் கொடுக்காமல் காப்பதற்கு நமது அரசு தொடர் முயற்சி மேற்கொள்ளும் என்பதனையும் பென்னிகுயிக் பிறந்த நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (38)

  • Akash - Herndon,யூ.எஸ்.ஏ

    This will include Stalin's expenses for London trips

  • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

    சிலை வைக்கவும் சமாதி கட்டவும் மட்டுமே தெரிந்த ஒரு அரசு உண்டு என்றால் அது நம்ப விடியல் அரசு தான்.

  • Ragothaman Raghavan -

    மக்களின் வரிப்பணத்தை வீண் செலவு செய்து அதை சாதனையாக சொல்லிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார் போலும். பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்.

  • appavi - cumbum,இந்தியா

    நன்றி

  • Rajagopalan - பெங்களூரு,இந்தியா

    தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் மேலும் சிலைகள் உடைக்கப்படும். இங்கிலாந்திலோ மனிதருக்கு சிலை திறப்புக்கு மகிழ்ந்து வாழ்த்து தெரிவிக்கப்படும். என்னே பகுத்தறிவு?

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்