dinamalar telegram
Advertisement

சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா: இளைஞர்கள் கத்தி போட்டு பரவசம்

Share
சேலம்: சேலம் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா, தை பிறப்பில் நடத்தப்படும். கொரோனா சூழலால் கட்டுப்பாடுகளுடன், வேம்படிதாளத்தில் நேற்று தொடங்கியது. சவுடேஸ்வரியம்மன் கோவிலில் சக்தி அழைப்பு நடந்தது. தொடர்ந்து பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்து சக்தி அழைக்கப்பட்டு, வீதிகளில் உலா வந்தது. மக்கள் அவரவர் வீடுகளின் முன், தேங்காய் பழம் உடைத்து வழிபாடு நடத்தினர். சுவாமி உலாவுக்கு முன், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சிறுவர்கள், கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனை அழைக்கும் கோஷத்துடன், சலங்கைகள் கட்டிய கத்திகளை, இரு கைகளில் ஏந்தி, நெஞ்சில் வீசியபடி ஊர்வலமாக வந்தனர். சிலர் வீரமுட்டி எனும் வேடம் அணிந்து, பாதுகாப்பு அளித்து வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று காலை சாமுண்டி அழைப்பு, மாலை ஜோதி ஊர்வலம் நடக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement