dinamalar telegram
Advertisement

மாட்டுச்சந்தையில் விற்பனை மந்தம்

Share
ஓமலூர்: பொங்கல் பண்டிகையால், சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து, விற்பனை மந்தமானது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, பெருமாள் கோவில் மாட்டுச்சந்தை, நேற்று கூடியது. ஆனால், பொங்கல் பண்டிகையால், 600 மாடுகள் மட்டும் கொண்டுவரப்பட்டிருந்தன. பண்டிகையில் விவசாயிகள், மக்கள் ஆர்வம் காட்டியதால், சந்தையில் கூட்டமும் குறைவாக காணப்பட்டது. கடந்த வாரம், விற்பனை சூடுபிடித்த நிலையில், நேற்று மந்தம் அடைந்தது. இச்சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து, குறைந்தது, 1,500 மேற்பட்ட மாடுகளை கொண்டு வருவர். பண்டிகையால் சந்தை களையிழந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement