dinamalar telegram
Advertisement

குடிநீர் கேட்டு சாலை மறியல்

Share
வாழப்பாடி: வாழப்பாடி, துக்கியாம்பாளையத்தில், 20 நாளுக்கு மேலாக குடிநீர் வினியோகிக்கப்பட இல்லை. இதனால், அப்பகுதியில் உள்ள, 100க்கும் மேற்பட்டோர் சிரமத்துக்குள்ளாகினர். சிலர், வாகனங்கள் மூலம், 2 கி.மீ., சென்று குடங்களில் எடுத்து வந்தனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், காலி குடங்களுடன் பேளூர் - வாழப்பாடி நெடுஞ்சாலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாழப்பாடி போலீசார் பேச்சு நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால், மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement