Load Image
Advertisement

ஜன.,16 தேசிய ஸ்டார்ட் அப் தினம்: பிரதமர் மோடி அறிவிப்பு

 ஜன.,16 தேசிய ஸ்டார்ட் அப் தினம்: பிரதமர் மோடி அறிவிப்பு
ADVERTISEMENT
புதுடில்லி: ஜன.,16 தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கடைபிடிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.


ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் வாழ்த்துகள். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான கொள்கைகளில் அரசு பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

Latest Tamil News
இனி வரும் காலங்களில் ஜன.,16 தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கடைபிடிக்கப்படும். மக்களின் ஆற்றலை தேசம் அங்கிகரித்துள்ளது.ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், புதிய இந்தியாவின் முதுகெலும்பாக மாறி உள்ளது. இந்தியா 100 ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, ஸ்டார்ட் அப்கள் முக்கிய பங்கு வகிக்கும். நாட்டின் புதிய கண்டுபிடிப்பாளர்கள், சர்வதேச அளவில் தேசத்தை மிளிர செய்கின்றனர். இந்த தசாப்தம் இந்தியாவின் தசாப்தமாக மாறியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


வாசகர் கருத்து (3)

  • ஆரூர் ரங் -

    நம் கல்வி மாணவர்களின் சுயத்தை அழித்து தன்னம்பிக்கையைக் குலைத்து வாழ்வின் கடைசி காலம்வரை கைகட்டி நிற்கும் வேலைக்கு மட்டுமே தயார் செய்யும்😒 வடிவில் இருந்தது. தொழில் முனைவோர்களை உருவாக்க ஒன்றும் செய்யவில்லை. ஐஐஎம் மில் மேலாண்மை படித்தவர்கள் கூட பெரும்பாலும் சுயதொழில் செய்யத்தயாரில்லை. எல்லோருக்கும் அரசு வேலை என்பது போலி😉 வாக்குறுதி. ஐந்து சதவீத இளைஞர்களையாவது சொந்த காலில் ஸ்டார்டப் துவக்கும் எண்ணத்துடன் உருவாக்கினால் மட்டுமே வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். கடந்த 5 ஆண்டுகளில் முதல் தலைமுறை தொழில் முனை னவோரால் 40 க்கும் மேற்பட்ட பில்லியன் டால‌ர்க்கு மேல் மதிப்புள்ள யூனிகார்ன் நிறுவனங்கள் உருவான👍 சாதனைக்கு பின்னால் நீங்கள் கொடுத்த ஊக்குவிப்பு உள்ளது என்பது உண்மை

  • Visu Iyer - chennai,இந்தியா

    இது ராஜீவ் காந்தி காலத்திலேயே இப்படி ஊக்கு வித்தவர் ராஜீவ் காந்தி - இது ஒன்றும் இப்போ புதியது அல்ல...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்