dinamalar telegram
Advertisement

இன்று மாட்டு பொங்கல்: காவிரியில் நீராடிய காளைகள்

Share
ஈரோடு: உழவுப்பணியில் விவசாயிகளின் உற்ற தோழனாகவும், பாரம் இழுக்கும் பணியில் குடும்ப உறுப்பினராகவும் திகழும், கால்நடைகளை போற்றும் வகையில், மாட்டு பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ஈரோட்டில் விவசாயப்பணிகளை விட பாரம் இழுக்க அதிகமாக கால்நடைகள் பயன்படுத்தப்படுகிறது. மாநகரில் கருங்கல்பாளையம், வைராபாளையம், சிந்தன்நகர், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம் பகுதிகளில், பாரம் இழுக்கும் மாடுகள் அதிகம் உள்ளன. மாட்டுப் பொங்கல் நாளில், அவைகளுக்கு ஒரு நாள் ஓய்வு கொடுப்பர். பொங்கலுக்கு தயார் படுத்தும் வகையில், கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு அழைத்து சென்று நேற்று குளிப்பாட்டினர். கொம்புகளுக்கு வண்ணமடித்து அலங்காரம் செய்தனர். இன்று நடக்கும் விழாவில், பொங்கல் வைத்து கால்நடைகளை வணங்குவர். நகரத்தை விட கிராம பகுதிகளில், மாட்டுப் பொங்கல் விழா அமோகமாக நடக்கும். இதனால் நேற்று முன்தினம், நேற்று நடந்த வாரச்சந்தைகளில், மாடுகளுக்கு புதிய கயிறு, அலங்கார கயிறு, பெயின்ட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement