dinamalar telegram
Advertisement

கோவில் வாசலில் நின்று வழிபாடு

Share
கோபி: கோபியில், கோவில்களின் நடை மூடியதால், தை பொங்கல் நாளில், வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு, அரசு தடை விதித்துள்ளது. இதன்படி கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் நடை நேற்று மூடப்பட்டது. இதனால் பொங்கல் நாளான நேற்று, கோவிலுக்கு வந்த பக்தர்கள், வாசலில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். இதேபோல் கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன், பச்சமலை மற்றும் முருகன் கோவில் நடைகளும் மூடப்பட்டன. கோபி, வேலுமணி நகர், சக்தி விநாயகர் கோவிலில், தை பொங்கலையொட்டி, சிறப்பு அபிஷேகம் செய்து, கரும்புகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement