dinamalar telegram
Advertisement

கால்நடை இனப்பெருக்க பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

Share
ஈரோடு: தமிழக அரசின் கால்நடை இனப்பெருக்க பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யுமாறு, ஜல்லிக்கட்டு போராட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன், முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வருக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தற்போது நீதிமன்ற வழிகாட்டு தல்படி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. தமிழக அரசு, 2019ல் கொண்டு வந்த கால்நடை இனப்பெருக்க பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பாரம்பரிய நாட்டு மாடுகள் அழிந்துவிடக்கூடாது. இதற்கு தடையாக கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கால்நடை இனப்பெருக்க பாதுகாப்பு சட்டம் - 2019ஐ கொண்டு வந்து, நாட்டு மாடுகளை அழிக்கும் முயற்சிக்கு வித்திட்டனர். இதை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில், 86 லட்சம் மாடுகள் உள்ளன. 40 ரூபாய் செலுத்தி, ஊசி மூலமே சினை பிடிக்க செய்ய வேண்டும் என்ற வணிகம் வரும்போது, காளைகளே இல்லாத நிலை ஏற்படும். அப்போது சினை ஊசி, 2,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் நிலை ஏற்படும். இதை அனுமதிக்கக்கூடாது. பாரம்பரிய கால்நடை இனங்கள் காக்கப்பட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement