dinamalar telegram
Advertisement

யானை தாக்கி விவசாயி பலி

Share
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, சோளப்பயிருக்கு காவல் காக்க சென்ற விவசாயி, யானை தாக்கியதில் பலியானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் ஊராட்சி பீக்கிரிபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன், 74; செல்லப்பன் தொட்டி பகுதியில் இவருக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தில் சோளம் பயிரிட்டுள்ளார். இரவில் வன விலங்குகள் தோட்டத்தில் புகுந்து சேதம் செய்வதால், பயிருக்கு காவல் காப்பது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்கு காவல் பணிக்கு சென்றார். இரவு, 11:௦௦ மணியளவில் ஒற்றை யானை சோளக்காட்டில் புகுந்தது. யானை மிதித்ததில் குருநாதன் பலியானார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement