dinamalar telegram
Advertisement

மஞ்சளை பாதுகாப்பதில் சிக்கல்: குறையும் சாகுபடி பரப்பு

Share
Tamil News
குளிர்சாதன வசதியுடன் நவீன குடோன் இன்றி, மஞ்சளை பத்தாண்டுகளுக்கு மேல் பாதுகாப்பதால், விலை கிடைக்காமல், மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.

தேசிய அளவில், 10 ஆண்டுகளுக்கு முன் வரை, மஞ்சள் விளைச்சலில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. தற்போது, மஹாராஷ்டிரா, ஆந்திராவுக்கு அடுத்து தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது. மஞ்சளை அதிக ஆண்டுகள் வைத்திருக்கலாம். மருத்துவ குணம் கொண்டது. உலகில் பல நாட்டினர் மஞ்சளை விரும்பி பயன்படுத்துவதால், தங்கம் போல என்றும் மஞ்சளுக்கு விலை உண்டு.

ஆனால், பல மாநிலங்களில் உற்பத்தி அதிகரித்ததுடன், அம்மாநிலங்களில் 'ஏசி'யுடன் கூடிய நவீன குடோன் வசதி, நீண்ட காலம் வைத்திருக்கும் வழிமுறைகளை அரசே செய்து கொடுப்பதால், அங்கு மஞ்சளின் சாகுபடி பரப்பு அதிகரிக்கிறது.தமிழகத்தில், 60 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மஞ்சள் பயிரிட்ட நிலை மாறி, 25 ஆயிரம் ஏக்கருக்கும் கீழ் தற்போது குறைந்துவிட்டது. ஈரோடு மாவட்டத்தில், 20 ஆயிரம் ஏக்கராக இருந்தது, 8,000 ஏக்கராக குறைந்து விட்டது. அத்துடன் விலையும், குவிண்டால், 5,000 முதல் 9,000 ரூபாய் என தள்ளாடுகிறது.

மஞ்சள் விவசாயிகள், வியாபாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் மஞ்சளை நவீன வசதியில்லாத குடோனில் வைக்கிறோம். பத்தாண்டுக்கு மேல் உள்ள மஞ்சள் கூட இன்னும் விற்பனைக்கு வருகிறது. இப்படியிருந்த மஞ்சளை வைத்து, நல்ல மஞ்சளையும் விலை குறைவாக நிர்ணயிக்கின்றனர். மஞ்சளை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் இருப்பு வைக்க கூடாது. தமிழகத்தில் நவீன, 'ஏசி' குடோன் வசதியில்லை.ஆண்டுக்கு ஆண்டு, மஞ்சள் சாகுபடி பரப்பை உயர்த்த நடவடிக்கை எடுக்காவிட்டால், ஈரோடு போன்ற ஊர்கள், 'மஞ்சள் நகரம்' என்ற பெயரை இழப்பதுடன், மஞ்சள் சாகுபடி பட்டியலில் இருந்து தமிழகம் மறையும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement