dinamalar telegram
Advertisement

விவசாயிகளுக்கு லாபம் தரும் சிம்ரன் கத்தரி

Share
Tamil News
திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் 'சிம்ரன்' கத்தரி, 'புல்லட்' மிளகாய் சாகுபடியாகிறது. இங்கு இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் பாலி, பசுமை மற்றும் நிழல் வலை குடில் அமைத்து காய்கறி சாகுபடி செய்கின்றனர். தற்போது மகசூல் அதிகம் தரும் 'சிம்ரன்' கத்தரி, 'புல்லட்' மிளகாய் சாகுபடி செய்து வருகின்றனர்.

திறந்த வெளியில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் 'சிம்ரன்'ரக ஒட்டு கத்தரி சாகுபடி செய்கின்றனர். அனைத்து காலநிலைகளிலும் வளரக்கூடியது. பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்காது.மற்றரக கத்தரிக்காய்களை விட மிகவும் ருசியாக இருப்பதால் மார்க்கெட்டில் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நடவு செய்து ஓராண்டு வரை காய் பறிக்கலாம். ஒரு ஏக்கரில் 10 டன் கிடைக்கும்.

புல்லட் மிளகாய் சாகுபடி

இதேபோல் திறந்த வெளியில் 'புல்லட்'ரக மிளகாய் சாகுபடி செய்கின்றனர். இதனை நடவு செய்து 8 மாதங்கள் வரை பறிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 8 டன்னுக்கு மேல் கிடைக்கும். இவ்விரண்டையும் சொட்டு நீர் பாசன முறை, 'மல்சிங் சீட்' பயன்படுத்தி சாகுபடி செய்வதால் களைகள் வளராது. களை வளராததால் செலவினம் குறைந்து விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் தரும்.

அதிகாரிகள் கூறுகையில், ''சிம்ரன், புல்லட் ரகம் பயன்பாட்டில் உள்ளது. இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் சாகுபடி செய்தால் கூடுதல் லாபம் பெறலாம். தோட்டக்கலை விற்பனையகத்தில் கத்தரி, மிளகாய் கிலோ ரூ.40 க்கு விற்கிறோம்'' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement