ADVERTISEMENT
கொச்சி: வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வணிக வளாகங்களுக்கு செல்லும் மக்கள் அந்த கட்டடத்தின் அடிப்பகுதியில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதற்காக வணிக வளாகம் சார்பில், இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு தொகையும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு தொகையும் கட்டணமாக வசூலித்து வருகின்றன. அதிலும், குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தால், கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கின்றன. இது பலருக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது, கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை என்று உத்தரவிட்டுள்ளது. கட்டட விதிகளின்படி, போதிய வாகன நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே கட்டடம் கட்டுவதற்கு அனுமதி உண்டு என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
வணிக வளாகங்களுக்கு செல்லும் மக்கள் அந்த கட்டடத்தின் அடிப்பகுதியில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதற்காக வணிக வளாகம் சார்பில், இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு தொகையும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு தொகையும் கட்டணமாக வசூலித்து வருகின்றன. அதிலும், குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தால், கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கின்றன. இது பலருக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தனியார்கள் இஷ்டத்திற்கு கொள்ளையடிப்பதை தடுக்கும் நீதிமன்றத்திற்குமா நீதி அரசுர்களுக்கும் நன்றி . அப்படியே சாலைக்காக பெட்ரொல் டீசல் மற்றும் வாகன வரியில் வரியை வசூலிக்கும் அரசு சாலைக்காக தனியாக உபயோகிப்பாளர் கட்டணம்வசூழிப்பதை நீதிமன்றமும் நீதி அரசுக்கும் தடை செய்வார்களா?