dinamalar telegram
Advertisement

பொங்கல் பரிசு பை கிழிந்ததை மறைக்கவா வீடியோ? கமல் கட்சி கிண்டல்

Share
கோவை: தி.மு.க., அரசின் எட்டு மாத சாதனையை விளக்கி வெளியிடப்பட்ட வீடியோவை மக்கள் நீதி மய்யம் கிண்டலடித்திருக்கிறது.

பொங்கல் பண்டிகை கொண்டாட ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு 21 பொருட்களுடன் தமிழக அரசு பரிசுப்பை இலவசமாக வழங்குகிறது. சில இடங்களில் இப்பொருட்கள் தரமற்றவையாக இருந்ததால் பொதுமக்கள் புகார் கூறினர். இச்சூழலில் எட்டு மாத தி.மு.க., அரசின் சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் 10.37 நிமிடம் பேசும் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை நிறைவேற்றி இருப்பதாக அவர் பெருமையுடன் பேசியிருக்கிறார்.

இதற்கு மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் சமூக வலைதளத்தில் '100வது நாள்... ஆறு மாதம்... ஓராண்டு ஆற்றிய பணி செய்த சாதனைகளை கூறுவது சரி. அதென்ன எட்டாவது மாதம்? ஓ... பொங்கல் பரிசுப்பை கிழிந்து போனதை மறக்கடிக்கவா?' என கிண்டலடித்திருக்கிறார். அவர் மேலும் கூறுகையில் ''எட்டாத உயரத்தில் விலைவாசி இருக்கிறது; எட்டும் துாரத்தில் 'நீட்' இல்லை. தாய்மார்களுக்கான உதவித்தொகை எட்டாக்கனியாக இருக்கிறது. எட்டு மாதத்தில் செய்ததில் திருப்தியாக எதுவும் இல்லை'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (15)

 • madhavan rajan - trichy,இந்தியா

  என்ன இருந்தாலும் ம நீ ம மிகவும் மோசம். 150 காவல் அதிகாரிகளுடன் முதல்வர் சைக்கிள் ஒட்டியதைக் கூடவா சாதனையாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. மீனவர் பிரச்சினையில் எவ்வளவு கடிதங்கள் எழுதியிருக்கிறார். தந்தையைப் போலவே இவருக்கும் சில கோடிகளில். மணி மண்டபம் ஏற்பாடு செய்வது தாக்கும். வாழும் பெரியார் என்று வீரமணி புகழ்வார் பாருங்கள்.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  வெள்ளத்தில் நல்ல வெள்ளம் உருகாதென்பது வல்லவன் வகுத்ததடா -இது ரேஷன் இனாமுக்கு பொருந்தாது உருகி விட்டது மார்கழி குளிரில்

 • இதயதர்சன் சுரேஷ் குமார் -

  0...

 • அப்புசாமி -

  போனாப் போகுதுன்னு பொங்கல் வெச்சு சாப்புடுங்கன்னு பிச்சை போட்டா இப்பிடி பாயுறாங்களே... எக்ஸ்ட்ராவா, சிரிஞ்ச், பல்லி, வண்டு, புழுன்னு வேற புரோட்டீன் உணவா குடுக்குறோம். சிரிஞ்ச வெச்சிக்கிட்டு நீங்களே தடுப்பூசி போட்டுக்கலாம். வெளீல ஒரு ஊசி 100 ரூவா விக்குது, தெரியுமில்லே..

 • theruvasagan -

  பொங்கல் இனாம் வேணும்னா நேரடியா கேளு. எதுக்கு சுத்தி வளைச்சு வர.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்