dinamalar telegram
Advertisement

91. ஜப்பானின் அழைப்பு

Share
Tamil News
ஹிட்லர் மற்றும் முசோலினியிடம் தான் கேட்ட உத்தரவாதம் கிடைக்கவில்லை என்பது நேதாஜிக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. ஆனாலும் தனது முயற்சிகளை அவர் கைவிட்டு விடவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த தன்னுடைய முயற்சிகளை செய்து கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் நேதாஜியை தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைப்பு ஜப்பான் விடுத்தது. அந்த நேரத்தில் நேதாஜிக்கு அந்த அழைப்பு ஓர் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஜெர்மனியில் இருந்து ஜப்பானுக்கு செல்வதை இங்கிலாந்து நாட்டின் மோப்பம் பிடித்து விட்டால் வேறு விதமான விளைவுகள் ஏற்படும் என்று நினைத்தார் நேதாஜி. அதனால் மிக கவனமாக இருந்தார் ஒரு அற்புதமான திட்டம் தீட்டினார். அவரது பேச்சுக்கள் அடங்கிய இரண்டு ஒலிநாடாக்களை தயார் செய்தார். வெவ்வேறு நாட்களில் அதை தனது வானொலியில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்துவிட்டு ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றார்.

தரைவழி பயணம் சாத்தியம் இல்லாத ஒன்று. கண்டிப்பாக இங்கிலாந்து அரசு கண்டுபிடித்துவிடும். வான் வழியாக பயணம் செய்வதற்கு ஜெர்மனியும் இத்தாலியும் உதவவில்லை. எனவே கடல் வழிப் பயணமே சிறந்தது என்று முடிவு செய்தார். மிகவும் ஆபத்து நிறைந்த பயணமாக அது அமைந்தது.

(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநில செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement