dinamalar telegram
Advertisement

இந்தியாவில் கோவிட் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 3.5 கோடியை நெருங்கியது

Share
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.22 லட்சம் பேர் கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 3,49,47,390 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நேற்றைய (ஜன.,14) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 94.83 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.32 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 3.85 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தடுப்பூசி



இந்தியாவில் இன்று (ஜன.,15) காலை 8 மணி நிலவரப்படி 156.02 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 58,02,976 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement