dinamalar telegram
Advertisement

ரூ.3 கோடி கடனை தராததால் தற்கொலை: இருவர் மீது வழக்கு பதிவு

Share
திருநெல்வேலியில் ரூ.3 கோடி கடன் பெற்றவர் திரும்பி தராதாதல் பள்ளித் தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக டாக்டர் உட்பட இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருநெல்வேலி ரஹ்மத் நகரை சேர்ந்தவர் சாம்சன் தேவதாஸ் 56. அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ., பள்ளியில் தலைமையாசிரியர். இவரது மனைவி மேரி விக்டோரியா 50. துாத்துக்குடி மாவட்டம் மணக்கரை சி.எஸ்.ஐ, பள்ளி தலைமையாசிரியை. இரண்டு மகள்கள். மூத்த மகள் திருமணமாகி துபாயில் வசிக்கிறார். இளைய மகள் படித்து வருகிறார். நெல்லையில் பீஸ் ஹெல்த் சென்டர் டாக்டர் அன்புராஜனுக்கு ரூ 3 கோடி வரை கடன் கொடுத்துள்ளார்.

அதில் தமது சொந்த பணம் போக எல்.ஐ.சி., கண்ணன் என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் சிலருக்கு லட்சக்கணக்கில் கடன் கொடுத்துள்ளார். இவருக்கு கடன் கொடுத்த எல்.ஐ.சி., கண்ணன் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி மேரி விக்டோரியா புகாரின் பேரில் போலீசார், டாக்டர் அன்புராஜன், எல்.ஐ.சி., கண்ணன் உள்ளிட்டோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக 306 பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement