dinamalar telegram
Advertisement

கார் மோதி விபத்து: தந்தை - மகள் பலி

Share
திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில், தந்தை-, மகள் பலியாகினர்.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 48. ஹீரோ ஹோண்டா பைக்கில், மகள் சவுமியா, 8; மகன் புகழ், 7, ஆகியோருடன் நேற்று மதியம் 3:30 மணிக்கு செம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். 'ஹெல்மெட்' அணியவில்லை. செங்கட்டாம்பட்டி அருகே, அவர்களுக்குப் பின்னால் வந்த மாருதி ஸ்விப்ட் கார் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே முருகன் பலியானார். வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சவுமியா இறந்தார்.புகழ், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை ஓட்டி வந்த சிங்கம்பட்டியைச் சேர்ந்த ராம்கி, 39 என்பவரை பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement