dinamalar telegram
Advertisement

ஐபாட்களை திருடிய இந்தியருக்கு 5 ஆண்டுகள் சிறை

Share
வாஷிங்டன்: அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த 3,000க்கும் மேற்பட்ட 'ஆப்பிள் ஐபாட்'களை திருடி விற்பனை செய்த இந்திய வம்சாவளிக்கு 66 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் கிறிஸ்டி ஸ்டாக் என்பவர், 2010 முதல் 2019 வரை பணியாற்றினார். இவர், ஆப்பிள் ஐபாட்களை பழங்குடியின இட ஒதுக்கீட்டின் கீழ் படித்து வரும் அமெரிக்க மாணவர்களுக்கு வினியோகிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவர் பள்ளி நிர்வாகத்தால் கொள்முதல் செய்யப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட ஆப்பிள் ஐபாட்களை திருடி உள்ளார்.

மேலும் இந்திய வம்சாவளியான சவுரப் சாவ்லா என்பவரின் உதவியுடன், அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்து, 6 கோடி ரூபாய் பணம் ஈட்டி உள்ளார்.இதுகுறித்து தெரியவந்ததை தொடர்ந்து கிறிஸ்டி ஸ்டாக் மற்றும் சவுரப் சாவ்லா கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. குற்றஞ்சாட்டப்பட்ட சவுரப் சாவ்லாவுக்கு 66 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 5.3 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.மற்றொரு குற்றவாளியான கிறிஸ்டி ஸ்டாக்கிற்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement